சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மக்களவை தொகுதி  வாக்கு எண்ணும் மையத்தில் பிரச்னையில் ஈடுபட்ட முகவர்கள்

விருதுநகர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சுற்றும் முடிந்தவுடன் உடனே பிரதிகள் கொடுக்க வலியுறுத்தி வேட்பாளர்களின் முகவர்கள் பிரச்னையில் ஈடுபட்டனர். 

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:17 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சுற்றும் முடிந்தவுடன் உடனே பிரதிகள் கொடுக்க வலியுறுத்தி வேட்பாளர்களின் முகவர்கள் பிரச்னையில் ஈடுபட்டனர். 

விருதுநகர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணும் பணி வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக், செந்திக்குமார நாடார் கல்லூரியின் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டன.

அதில், அருப்புக்கோட்டை தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தில்  முதல் சுற்று முடிந்ததும், வாக்கு எண்ணும் அதிகாரிகள் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்களை தெரிவித்தனர். இது ஒரு சிலருக்கு கேட்காத நிலையிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த முகவர்கள் உடனே ஒவ்வொரு சுற்றும் முடிந்தவுடன் வாக்கு விவரங்களை உடனே அச்சு நகலில் வழங்குமாறு கூறி கூச்சலிட்டனர்.
  
அதையடுத்து உடனே வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அச்சு பிரதிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். இதனால், இரண்டாவது சுற்று வாக்குகள் எண்ணும் பணி 10 நிமிடம் பாதிக்கப்பட்டு, தாமதமாகவே தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.